LATEST NEWS
கடைசியா கேப்டனை அங்க தான் பார்த்தேன்… கனவுல கூட நினைக்கல.. கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறிய நடிகை ராதா..!!

நடிகை ராதாவும், நடிகர் விஜயகாந்த் இணைந்து அம்மன் கோவில் கிழக்காலே, சட்டம் ஒரு விளையாட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம், வேங்கையின் மைந்தன், மீனாட்சி திருவிளையாடல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகரும் தே.மு.தி.க தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராதா மறைந்த தே.மு.தி.க தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து ராதா பேசியதாவது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. சினிமாவில் இணைந்து நடித்த சில காலத்திற்கு பிறகு விஜயகாந்தை ஊட்டியில் ஒரு ஷூட்டிங்கில் சந்தித்தேன்.
இதனையடுத்து பிறந்த நாட்களின் போது அவருக்கு போன் செய்து பேசுவேன். அம்பிகா அக்கா பிரேமலதாவிடம் பேசி இருக்காங்க. என் பெண்ணோட கல்யாண பத்திரிக்கையை விஜயகாந்த்திடம் கொடுக்க முடியல. இதனால் பிரேமலதா அக்காவிடம் கொடுத்தேன். விஜயகாந்தின் உடல்நலம் சரியாக இல்லாததால் என் பெண்ணின் கல்யாணத்திற்கு வரல.
ஆனால் பிரேமலதா என் பெண்ணின் கல்யாணத்திற்கு முதல் நாளே வந்து வாழ்த்திட்டு போனாங்க. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. விஜயகாந்தின் ஆசிர்வாதத்துடன் தான் அவங்க வந்திருப்பாங்க. அது எனக்கு ரொம்ப பெரிய விஷயம். இந்த இடத்தில் விஜயகாந்தை இப்படி பார்ப்பேன் என கனவிலும் நான் நினைக்கவே இல்லை. அவர் ரொம்ப நல்லவர். நிறைய நல்லது செய்திருக்கிறார். அவர் எப்போதும் நம்முடன் இருப்பார். இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியல என ராதா கூறினார்.
#Chennai | #Vijayakanth | #VijayakanthDeath | #Koyambedu | #ActressRadha | #PremalathaVijayakanth | #PolimerNews pic.twitter.com/TlYOu2tdTE
— Polimer News (@polimernews) January 11, 2024