LATEST NEWS
“என் வாழ்க்கையே அழிச்சிட்டாங்க”.. தினேஷ் பற்றி மறைமுகைமாக பேசிய ரச்சிதா.. அப்படி என்ன சொன்னாங்க தெரியுமா..?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடைசியில் டைட்டிலை யார் வெல்ல போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வேல்டு கார்டு போட்டியாளராக தினேஷ் களமிறங்கினார். அவரது மனைவி ரச்சிதா பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக பங்கேற்றார்.
நடிகை ரஞ்சிதா சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷை ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய தினேஷ் பிக் பாஸ் டைட்டிலை வென்றால் உடனே தனது மனைவியிடம் சென்று நடந்த பிரச்சனைகளை சரி செய்வேன் என கூறியுள்ளார். இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தொடர்ந்து ரச்சிதா தினேஷுடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாதது போல பதிவுகளை வெளியிடுகிறார்.
இந்நிலையில் ரட்சிதா தனது சமூக வலைதள பக்கத்தில் Emotional and Narcissistic Abuse என்ற புத்தகத்தை குறிப்பிட்டு என் மனதின் காயங்கள் ஆறுவதற்கு இந்த புத்தகம் தான் காரணம். யாராவது மன உளைச்சலில் இருந்தால் நான் அவர்களுக்கு இந்த புத்தகத்தை பரிந்துரை செய்வேன் என கூறியுள்ளார். இதேபோல அந்த புத்தகத்தில் இருக்கும் ஒரு பக்கத்தை குறிப்பிட்டு ஒரு நபர் என் வாழ்க்கையை அழித்துவிட்டு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறார் என மறைமுகமாக தினேஷ் பற்றி கூறியுள்ளார்.