GALLERY
அதைப்பற்றி ஏன் யோசிக்கல..? தினேஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த ரசிகர்கள்.. ரச்சிதாவின் எமோஷனல் பதிவு..!!
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஜோடியாக நடித்த பலர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். சில ஜோடிகள் வெற்றிகரமாக குடும்ப வாழ்க்கையை தொடர்கின்றனர். ஆனால் சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் தினேஷ்- ரச்சிதா தம்பதியினர் ஒன்றாக நடித்தது முதல் நண்பர்களாக பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரச்சிதாவும், தினேஷும் பிரிந்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக பங்கேற்றார். ஆரம்பத்தில் இருந்து ரட்சிதாவிற்கு தினேஷ் ஆதரவு தெரிவித்தார். இதனால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தினேஷ் மிரட்டுவதாக ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் தினேஷ் தனது மனைவி ரச்சிதாவுக்கு பிக் பாஸ் டைட்டில் ரொம்ப பிடிக்கும். அவருக்காக தான் இந்த டைட்டிலை வாங்கி அவருக்கு பரிசளிப்பேன் என தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் கதை சொல்லும் டாஸ்க்கில் தான் கடந்த மோசமான காலகட்டம் என்றால் அது தனது மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு அனுபவித்த காலகட்டம் தான் என கூறியிருந்தார்.
இதனை கேட்டதும் மீண்டும் தினேஷும் ரச்சிதாவும் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் எமோஷனலாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் எல்லா மக்களும் வழி ஏற்படுத்திவர்களை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறார்கள்.
நாம் இந்த அளவிற்கு உறுதியான முடிவில் இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு வலியை அனுபவித்து இருப்போம் என்பதை பற்றி யாரும் யோசிக்கவே இல்லை என தெரிவித்து, பட்டவங்களுக்கு தானே அதோட வலி தெரியும் என கூறியுள்ளார். இதன் மூலம் தினேஷுடன் இணைந்து வாழப் போவதில்லை. ரசிகர்களின் விருப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரச்சிதா கூறி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.