LATEST NEWS
சும்மா சிரிச்சதுக்கே அடிக்க வந்துட்டாரு.. பிரபல நடிகர் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய கே.எஸ் ரவிக்குமார்.. வைரல் வீடியோ..!!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஹன்சிகாவின் கார்டியன் பட விழாவில் கலந்து கொண்டார். அவர் இயக்குனர் பாலகிருஷ்ணா பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாளை ஹன்சிகா நடிப்பில் உருவான கார்டியன் என்ற பேய் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை கே.எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
ஏற்கனவே இருவரும் இணைந்து தர்ஷன் மற்றும் லாஸ்ட்லியா நடித்த கூகுள் குட்டப்பா ஆகிய படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் கார்டியன் பட விழாவில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பேசியதாவது, பாலகிருஷ்ணாவுக்கு யாராவது சிரித்தால் கோபம் வந்துவிடும். உடனே போய் ஏன் என்னை பார்த்து சிரிக்கிற என கேட்டு விடுவார்.
ஒரு சமயம் படப்பிடிப்பின் போது பாலகிருஷ்ணா நோக்கி மின்விசிறி திருப்பும்போது அவருடைய விக் லேசாக ஆடியது. அதனை பார்த்தவுடன் சரவணன் சிரிச்சிட்டான். உடனே பாலையாவுக்கு கோபம் வந்துவிட்டது. யாருடா நீ ஏன் சிரிக்கிற என கேட்டு கிட்ட வந்துட்டாரு.
எங்க அடிச்சிட போறாரான்னு பயந்து நான் அவரிடம் சென்று சார் அவன் நம்ம அசிஸ்டன்ட் தான்னு சொன்னேன். இல்ல அவன் ஆப்போசிட் பார்ட்டி இவன் நம்மாளு கிடையாதுன்னு சொன்னாரு. அப்படியெல்லாம் கூத்து பண்ண சரவணன் கார்டியன் படத்தை இயக்கியிருக்கிறார் என கேஎ.ஸ் ரவிக்குமார் பேசினார். தற்போது அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Never Expected This From KS RaviKumar & it’s Totally Unfair. pic.twitter.com/kQihjNpARj
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 6, 2024