சிறுமி படுகொலைக்கு நெஞ்சை பதற வைக்கிறது.. தண்டனை அப்படி தான் இருக்கணும்.. இரங்கல் தெரிவித்த TVK தலைவர் விஜய்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சிறுமி படுகொலைக்கு நெஞ்சை பதற வைக்கிறது.. தண்டனை அப்படி தான் இருக்கணும்.. இரங்கல் தெரிவித்த TVK தலைவர் விஜய்..!!

Published

on

பிரபல நடிகர் ஆன விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் தற்போது நடித்து வருகிறார் அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். அடுத்ததாக தனது 69-வது படம் முடிந்தவுடன் சினிமாவில் இருந்து விலக போவதாக விஜய் அறிவித்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

கட்சி சார்பில் மக்களுக்காக நலத்திட்ட பணிகளை செய்யவும் தொடங்கி விட்டார். இந்நிலையில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரான விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.

Advertisement

அதில் அவர் கூறியிருப்பதாவது, புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுதலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து பெரும் துயரத்துடன் இருக்கும் சிறுமியின் பெற்றோருக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஈவு இரக்கமில்லாமல் சிறுமியை மிருகத்தனமாக படுகொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை பெற்று தர புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in