LATEST NEWS
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியா இது?…. நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே… லேட்டஸ்ட் போட்டோ…!!!
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பார்த்திபன் கனவு, போஸ், மனசெல்லாம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரால் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் வர முடியவில்லை. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் ஸ்ரீகாந்த் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மற்றும் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பெண்களின் சாக்லேட் பாயாக இருந்த இவர் பெரிய அளவு ஹிட்டுக் கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காணப்படும் நடிகராக வளம் வந்தார். நடிகர் விஜயுடன் சேர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு நண்பன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் சத்தம் இன்றி முத்தம் தா, ஆப்பரேஷன் லைலா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
நடிகர் ஸ்ரீகாந்த் 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அழகாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.