VIDEOS
இன்னும் இளமை மாறாத… நதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… இன்ஸ்ட்ராகிராமை கலக்கும் போட்டோஸ்…!

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் பத்மினியோடு இணைந்து ‘நோக்கத்த தூரது கண்ணும் நட்டு’ என்ற படத்தில் 1984 -ல் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்தமைக்காக நதியாவிற்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை மலையாளத்தில் பெற்றார். பின்னர் இப்படம் தமிழில் பத்மினியுடன் ‘பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் 1988 வெளிவந்தது.
இந்த தமிழ் படத்தில் நடித்ததால் தமிழ் ரசிகர்களின் மனதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் நடித்த காலகட்டத்தில் பெண்கள் உபயோகிக்கும் எந்த பொருள் எடுத்தாலும் இவர் பெயர் சொல்லும் அளவிற்கு பிரசித்தி பெற்றிருந்தார். இவரின் பெயரிலேயே நதியா செருப்பு, நதியா புடவை, நதியா வளையல் என்று பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்திற்கும் நதியாவின் பெயரை வைக்கும் அளவிற்கு பிரபலம் அடைந்திருந்திருந்தார்.
இதனிடையே திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிப்பிற்கு சிறிய பிரேக் எடுத்தார்.பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற தமிழ் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக மீண்டும் அறிமுகமானார். இதில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டில் இவர் ஆரோக்கிய பால் மற்றும் தங்கமயில் ஜுவல்லரியின் பிராண்ட் தூதராகவும் பொறுப்பேற்றார்.
இத்தகைய தமிழ் திரைப்பட நடிகை நதியா அக்டோபர் 24 1966 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சரீனா அனுஷா மோய்டு ஆகும். இந்நிலையில் அக்டோபர் 24ம் நாளான செவ்வாய்க்கிழமை தனது 57வது பிறந்த நாளை தன்னுடைய குடும்பத்துடன் கிராண்டாக கொண்டாடினர். தற்பொழுது இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
View this post on Instagram