VIDEOS
விவசாயினா ஏழையா தான் இருக்கணுமா…? ஆடி காரில் வந்து காய் கறிகளை விற்று மாஸ் காட்டிய விவசாயி…! வைரலாகும் வீடியோ…!
நம் நாட்டில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் பொதுவாக எப்பொழுதும் விவசாயிகள் ஏழ்மை நிலையிலேயே காணப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் இடைத்தரகர்கள் தான். இவர்கள் விவசாயிகளிடமிருந்து மிகவும் மலிவான விலைக்கு பொருட்களை வாங்கி அவர்களை ஏமாற்றி நல்ல லாபத்தை பார்த்து விடுகின்றனர். நமக்காக வயலில் பாடுபட்டு உழைக்கும் விவசாயி அதே ஏழ்மை நிலையில் இருந்தே கஷ்டப்படுகின்றனர்.
தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுவது, விவசாயத்திற்காக கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்வது, இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படுவது என அவர்கள் படும் கஸ்டங்கள் ஏராளம். இவர்களின் இந்த நிலையை போக்க அரசும் பல்வேறு உதவிகளை விவசாயிகளுக்கு செய்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து நேரடியாக விவசாய பொருட்களை கொள்முதல் செய்தும் வருகிறது.
தற்பொழுது விவசாயி என்றால் ஏழ்மையா தான் இருக்கணுமா? இப்ப பாருங்க என்பது போல கேரளாவில் விவசாயி ஒருவர் ஆடி காரில் வந்து மாஸாக இறங்கி காய் கறிகளை விற்ற சம்பவம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
A farmer from Kerala transports the leafy vegetables grown in his farm & send to the market and then puts them in his Audi car and becomes a merchant and sells the his leafy vegetables ,
” Every single farmer in the country should be able to earn like this “from :@timesofindia pic.twitter.com/XirmeyWbl1
— VENKATESH (@VenkateshOffi) September 30, 2023