சீரியல்ல எலியும், பூனையுமா இருந்துகிட்டு… என்ன பாக்கியா ராதிகா கூட சேர்ந்து இந்த ஆட்டம் போடுறீங்க…? வைரலாகும் வீடியோ…! - cinefeeds
Connect with us

VIDEOS

சீரியல்ல எலியும், பூனையுமா இருந்துகிட்டு… என்ன பாக்கியா ராதிகா கூட சேர்ந்து இந்த ஆட்டம் போடுறீங்க…? வைரலாகும் வீடியோ…!

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்திற்காக தனது கனவை தியாகம் செய்து வாழும் பெண்ணாக பாக்கியா  கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சதீஷின் நடிப்பிற்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் தனியாக கோபி ஆர்மி என்று உருவாக்கப்பட்டு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

தற்போது இந்த சீரியலில் கோபியை விவாகரத்து செய்த பாக்கியா அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்ந்து வருகிறார். தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியாவின் கேட்டரிங் கான்ட்ராக்ட் அவரை விட்டு கை நழுவி உள்ளது. நேரம் பார்த்து பாக்கியாவை ராதிகா பழிவாங்கியுள்ளார்.இதைத்தொடர்ந்து இனி பாக்கியா என்ன செய்ய போகிறார் என அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் செழியன் வேறொரு பெண்ணுடன் தப்பாக பழகுவது குறித்த சந்தேகமும் தற்பொழுது பாக்கியாவிற்கு வந்துள்ளது. தந்தையை போலவே தப்பான வழியில் செல்லும் செழியன் பாக்கியாவிடம் மாட்டுவாரா என இனி நாம் பார்க்கலாம்.

Advertisement

 

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தற்பொழுது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் நடிகை ரேஷ்மாவுடன்,  நடிகை சுசித்ராவும் இணைந்து நடனமாடி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்,  ‘என்ன பாக்கியா ராதிகா கூட சேர்ந்து இந்த ஆட்டம் போடுறீங்க?’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement