LATEST NEWS
இதனால் தான் ஜெயிலர் விநாயகன் கைது செய்யப்பட்டாரா..? வெளியான வீடியோ
மதுபோதையில் தகராறு செய்த காரணத்தினால் ஜெயிதர் பட வில்லன் விநாயகன் காவல் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டிருக்கின்றார் ஜெயிலர் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பவர் நடிகர் விநாயகன் இவர் ஏற்கனவே தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார், அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார்.
இவர் குடிபோதையில் தகராறு செய்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து எர்ணாகுளம் காவல் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது நடிகர் நாயகன் நேற்று மாலை குடிபோதையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு முன்னதாக தனது குடியிருப்பு பகுதியில் சில பிரச்சினைகளையும் ஏற்படுத்தி இருப்பதாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அங்கு காவல் நிலையத்தில் பிரச்சனை செய்திருக்கிறார்.
அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இதை எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் 28 காலமாக மலையாள திரை உலகில் பிரபல நடிகராக வலம் வரும் இவர் தமிழில் திமிரு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார் அதன் பிறகு சிம்புவின் சிலம்பாட்டம் மரியான் சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்திருக்கிறார் ஆனால் இவருக்கு பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது ஜெயிலர் திரைப்படம் தான் ஆனால் அந்தப் புகழை அவரே கெடுத்துக் கொண்டிருக்கிறார்
Jailer Varman X Ayyappanum Koshiyum#Vinayakan pic.twitter.com/HkQgtsVb26
— Rajini Kaavalan (@kavalan_rajini) October 24, 2023