VIDEOS
என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…? ‘எதிர்நீச்சல் ‘ஞானவேலுடன் ரொமான்டிக்காக நடனமாடிய ஜான்சி ராணி…! வைரல் வீடியோ…!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று டி ஆர் பி யில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. குடும்பத்து பெண்களை ஆணாதிக்கம் செய்யும் ஆண்களை அடக்கும் பெண்களாக இந்த சீரியலில் உள்ள பெண்கள் கலக்கி வருகின்றனர். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். தற்பொழுது இந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ரமாமூர்த்தி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த சீரியலில் தற்பொழுது கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்தியபிரியா, பாம்பே ஞானம், காயத்ரி கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் கரிகாலனின் அம்மாவாக ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். இவர் சமூக நலத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். திருநங்கைகளின் நலனுக்காகவும் இயங்கி வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தன்னுடன் இணைந்து ஞானவேல் கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர் கமலேஷுடன் ரொமான்டிக் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram