LATEST NEWS
யாரைப்பற்றியும் தெரியாம… வாயத்தொறக்க கூடாது… இமான் மீது கடுப்பில் பாயும் தீபக்…!

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி. இமான் ஆவார். இந்நிலையில் D. இமான் 2008 இல் மோனிக்கா ரிச்சர்டை மணமுடித்தார். பின் இவர் டிசம்பர் 2021 இல் மோனிகாவை விவாகரத்து செய்தார். மேலும் இந்த தம்பதியருக்கு வெரோனிகா, டோரதி இமான் மற்றும் பிளெஸ்ஸிகா கேத்தி இமான் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை மூன்று சூப்பர்ஹிட் ஆல்பங்களை வழங்கினார். இதன்பின் கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.
இதனிடையே சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அதில் அவர் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், அது தனக்கு மிகவும் தனிப்பட்ட காரணமாகும், மேலும் இது தனது குழந்தைகளை பாதிக்கலாம் என்றும் டி இமான் கூறினார்.

#image_title
இதனால் ஊடங்கங்களில் பல்வேறு கருத்துக்கள் வந்த நிலையில் இதனை குறித்து D. இம்மானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட், ‘சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு நலம் விரும்பி மற்றும் குடும்ப நண்பராவார். மேலும் தனக்கும் தனது முன்னாள் கணவர் டி இமானுக்கும் இடையிலான இடைவெளியை சரிசெய்ய முயன்ற பொழுது அவர் இம்மானுக்கு ஆதரவாக இல்லாமல் நியாயமான என் பக்கம் பேசினார்.இதனால் தான் இமான் அவரை குறித்து தவறாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் ‘ என்று கூறியுள்ளார்.
இவ்வாறு இருக்கையில் பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக், இந்த சர்ச்சையை குறித்து யாரைப் பற்றியும் முழுமையாக தெரியாமல் அவர்களை பற்றிய அவதூறு செய்திகளை பரப்பக்கூடாது. மேலும் வாயை மூடி அமைதியாக இருக்கவேண்டும் என்று தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளார். சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து தீபக்கும் இவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.