LATEST NEWS
சிவகார்த்திகேயன் -இமான் விவகாரம் பற்றி … இமான் மீது கோபத்தில் பாய்ந்து … காரசாரமாக பேட்டியளித்த பிரபலம்…!
தமிழ் சினிமாவில் ஒருவருக்கு எவ்வளவு நல்ல பெயர் கிடைக்கிறதோ அது போல் அவர்களை தொடர்ந்து அவதூறு கருத்துகளும் பரவி வருகின்றன.இதைபோல் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து டி.இமான் கூறியது, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் இசையமைப்பாளர் டி.இமான் அளித்த பேட்டியில், ‘சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார், அது என்னவென்று என்னால் சொல்ல முடியாது.
ஆனால் அவரது படத்திற்கு ஒருபோதும் இசையமைக்க மாட்டேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இமான் சொல்லிய சிவகார்த்திகேயன் மீதான குற்றச்சாட்டுகளை அவரது முதல் மோனிகா மறுத்து , ‘சிவகார்த்திகேயன் என்னை ஆதரவாக இமானிடம் பேசினார். இதற்காக தான் இமான் இவ்வாறு சொல்கிறார்.மேலும் சிவகார்த்திகேயன் மிகவும் நல்லவர்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து இமான்-சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமான ஒருவர் பேட்டி அளித்துள்ளார். ஆனால் அவர் யார் என்பதை வெளியிட விரும்பவில்லை என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ”சிவகார்த்திகேயன் சினிமா உலகில் நான் மிகவும் மதிக்கும் ஒரு பிரபலம். சிவகார்த்திகேயனை துரோகி என்று சொல்ல டி.இமானுக்கு எந்தவித தகுதியும் இல்லை.
துரோகம் என்றால் என்ன?, ‘நான் எந்தப் பெண்ணையும் பின்தொடர்ந்ததில்லை, எந்தப் பெண்ணுடனும் உடல் ரீதியில் தொடர்பு வைத்ததில்லை, என்னிடம் (…) CHAT செய்ய அழைத்த பெண்களும் உள்ளனர்’ என்று ஒரு பேட்டியில் இமானே கூறியுள்ளார். பெண்கள் உங்களை அப்படி CHAT பண்ணுவதற்கு அழைத்தார்கள் என்றால், உங்களுடைய வீக்னெஸ் பற்றி அவர்கள் அறிந்துள்ளார்கள் என்பது தானே அர்த்தம்.
இதுவே டி.இமான் தன் மனைவி மோனிகாவுக்கு செய்த துரோகம் ஆகும் . மேலும் அவர், இமானின் தந்தை டேவிட் ஒரு ஆசிரியர் மற்றும் தங்கமான மனிதர் ஆவார். ஆனால் இமான் அவ்வாறு இல்லை” என்று பரபரப்பான விஷயங்களை கூறியுள்ளார்.