“அவரு ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ கிடையாது… அவரை ஹீரோவாக டிசைன் செய்தது இவர்தான்…? சிவகார்த்திகேயனின் திரையுலக சீக்ரெட்டை உடைத்த பிஸ்மி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அவரு ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ கிடையாது… அவரை ஹீரோவாக டிசைன் செய்தது இவர்தான்…? சிவகார்த்திகேயனின் திரையுலக சீக்ரெட்டை உடைத்த பிஸ்மி..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் தன்னுடைய நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசும்போது, தான் சுயமாக உருவான கலைஞன் அல்ல, மக்களால் உருவாக்கப்பட்டவன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இவரது இந்தப் பேச்சுக்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயனின் திரையுலக பின்னணி மற்றும் அவரது வளர்ச்சிக்குப் பின்னால் இருந்த உண்மைகளை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

உண்மையில் சிவகார்த்திகேயன் ஒரு ‘செல்ஃப் மேட் ஸ்டாரும்’ கிடையாது, ‘பீப்பிள் மேட் ஸ்டாரும்’ கிடையாது; அவர் ஒரு ‘ஆர்.டி. ராஜா மேட் ஸ்டார்’ என்பதே உண்மை என்று பிஸ்மி தெரிவித்துள்ளார். ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயன் செகண்ட் ஹேண்ட் காரை ஓட்டி வந்த நிலையில், அவரை ஒரு பெரிய நட்சத்திரமாக காட்ட வேண்டும் என்பதற்காக, அன்றைய காலகட்டத்திலேயே ரூ. 40 முதல் 50 லட்சம் மதிப்புள்ள ஆடி (Audi) காரை வாங்கித் தந்து மாஸாக டிசைன் செய்ததே தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா தான் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

மேலும், வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோதே அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஹன்சிகாவை நடிக்க வைத்தது, ‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்தது மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் ஃபஹத் பாசிலை வில்லனாக களம் இறக்கியது என சிவகார்த்திகேயனின் தகுதிக்கு மீறிய பல விஷயங்களை செய்து அவரை ஒரு பெரிய ஸ்டாராக மாற்றியவர் ஆர்.டி. ராஜா தான் என்று பிஸ்மி குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு மனசாட்சி இருந்தால் தன்னை உருவாக்கியது ஆர்.டி. ராஜா தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், ஆனால் தன்னை ‘பீப்பிள் மேட் ஸ்டார்’ என்று கூறிக்கொள்வதன் மூலமாக அவர் தனக்குத்தானே பெருமை தேடிக்கொள்கிறார் என்றும் பிஸ்மி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in