VIDEOS
தனுஷ், சிவகார்த்திகேயன் வாழ்க்கையில இதுதான் அத காட்டி குடுத்துச்சி.. உண்மையை அவிழ்த்த பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் தங்களுக்கு ஏற்ற ஒரு கெட்டபில் இருப்பார்கள். அதேசமயம் பொதுவாக அனைவரும் கழுத்தில் அல்லது கையில் கருங்காலி மாலை போட்டிருப்பதை பலரும் பார்த்திருப்போம். சில சமயம் அதை ஸ்டைலாகவும் சில சமயம் பக்தியாகவும் அதனை நினைத்திருக்கலாம். உதாரணத்திற்கு நடிகர் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் எந்த நேரமும் கழுத்தில் அந்த மாலையுடன் இருப்பார்கள்.
ஆனால் உண்மையிலேயே அந்த மாலைக்கு பின்னால் ஒரு சுவாரசிய சம்பவம் உள்ளது. அந்த மாலை அணிந்து கொண்டால் மனது எப்போதும் நிம்மதியாகவும் எவ்வித கோபமும் இல்லாமல் தங்களை சாந்தமாக வைத்துக் கொள்வதற்காகவே பலரும் அந்த மாலையை அணிந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கூட அந்த மாலை அணிந்திருந்ததை பலரும் பார்த்திருப்போம்.
இந்த கருங்காலி மாலையை அனைவரும் அணியலாம். இப்படி அணிவதால் உடம்பில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலில் இருந்து விடுபட முடியும். இந்த மாலை நம்முடைய உடம்பில் பட்டு மரத்தில் உள்ள பாசிட்டிவ் எனர்ஜியை நமக்குள் ஊடுருவ செய்து நம்மை பாசிட்டிவான நபர்களாக மாற்றி விடும்.
இந்த கருங்காலி மாலையை சமீப காலமாக ஆன்மீகவாதிகள் பலரும் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் நடிகர்களும் அணிந்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இந்த மாலையை அணிந்து உள்ள நிலையில் அவர்கள் இருவரும் இந்த மாலையை அணிந்த பிறகு வெளிவந்த ஒரு உண்மை குறித்து பிரபலம் ஒருவர் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.