நோயாளியாய் படுக்கையில் இருந்து…. தேறி மீண்டும் ஆணழகனாக மாஸ் காட்டும்… KPY ரோபோசங்கரின் வைரல் வீடியோ…! …. - cinefeeds
Connect with us

TRENDING

நோயாளியாய் படுக்கையில் இருந்து…. தேறி மீண்டும் ஆணழகனாக மாஸ் காட்டும்… KPY ரோபோசங்கரின் வைரல் வீடியோ…! ….

Published

on

விஜய் டிவியின் கலக்க போவது யாரு?  புகழ் ரோபோ சங்கர், 1997 ஆம் ஆண்டு மிஸ்டர் மதுரை, 1998 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டமும் வாங்கியுள்ளார். அப்பொழுது தனது உடலில் பெயிண்டினை பூசி ஒரு ரோபோவினை போன்று அசைவுகள் செய்து பங்கேற்றார். இதனால் ரசிகர்கள் கவரப்பட்டு இவருக்கு ரோபோ சங்கர் என்ற செல்ல பெயர் வைத்தனர். இதுவே பின்னாளில் அவரின் அடையாளமாக மாறியது.

இதன் பிறகு விஜய் டிவியில்  நடைபெற்ற கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சியினால் ஏற்பட்ட புகழ் காரணமாக இவருக்கு படவாய்ப்புகள் வந்தன. ரோபோ சங்கர், தனுஷ் உடன் மாரி, சிவகார்த்திகேயன் உடன் வேலைக்காரன் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் உடல் மெலிந்து படுத்தப்படுக்கையானார் ரோபோசங்கர். இதன் பின்பு மஞ்சள் காமாலைக்கு இவர் சிகிச்சை பெற்றதன் விளைவாக தற்பொழுது உடல்நிலை சற்று தேறி வந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்று தனது உடலில் பெயிண்ட் பூசி பாடிபில்டர் செய்வது போல் உடல் அசைவுகளை செய்து காட்டினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பூங்கா முருகன் சஷ்டி மண்டபத்தில் மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சார்பில் 37வது மதுரை ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரோபோசங்கர் சிறப்பு விருந்தினருக்கான பகுதியில் 25 ஆண்டுகளுக்கு பின் உடலில் பெயிண்ட் பூசி தன்னுடைய கட்டுமஸ்தான உடல் செய்கைகளை செய்து காட்டி அசத்தினார். மேலும் ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகளும் சேர்ந்து இதற்கு தயாரானதிலிருந்து அவர் மேடையில் perform பண்ணும்வரை உடன் இருந்து ரோபோசங்கரை  மிகுந்த உற்சாகப்படுத்தினர்.   

Advertisement