ஒரே படத்தில் ஒன்றிணையும் பகத் பாஸில், எஸ் ஜே சூர்யா….! அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா?..!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே படத்தில் ஒன்றிணையும் பகத் பாஸில், எஸ் ஜே சூர்யா….! அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா?..!!!

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த எஸ்.ஜே சூர்யா. தற்போது பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். தமிழில் வாலி என்ற திரைப்படத்தை முதன் முதலில் இயக்கிய எஸ் ஜே சூர்யா அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

#image_title

இந்த இரண்டு படங்களும் இவரது கேரியரில் முக்கிய படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வந்த எஸ் ஜே சூர்யா. பின்னர் ஹீரோவாகவும் அறிமுகமானார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் ஸ்பைடர் என்ற திரைப்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமானார்.

#image_title

அதன் பின்னர் மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தி இருக்கின்றார். தமிழில் எப்படி சூர்யாவோ அதே போல மலையாளத்தில் நடிப்பு அரக்கனாக வலம் வருபவர் பகத் பாசில். இவர்கள் இருவரும் ஒரே திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை விபின் தாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement