அட அப்படியா…! மகாநதி நடிகை காவேரி…. சினிமாவில் எத்தனை படத்தில் நடிச்சிருக்காங்க தெரியுமா?…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அட அப்படியா…! மகாநதி நடிகை காவேரி…. சினிமாவில் எத்தனை படத்தில் நடிச்சிருக்காங்க தெரியுமா?…!!

Published

on

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர் நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கின்றது. அதிலும் மகாநதி சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

#image_title

இந்த தொடரில் லட்சுமி பிரியா, காவியா, அதிதி சௌந்தர்யா , சுதா சிவகுமார், ருத்ரன், பிரவீன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகிறார்கள். தந்தையை இழந்த சகோதரிகள் என்னவெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை பற்றிய கதைதான் இது. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வருபவர் நடிகை லட்சுமி பிரியா.

#image_title

கல்லூரியில் படிக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக மாடலிங் துறையை தேர்வு செய்தவர். சில விளம்பர திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். அதோடு மட்டுமில்லாமல் மிஸ் மிராக்கி 2018 அழகி போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார். தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி அலைந்த இவர் யோகி பாபு உடன் பன்னிக்குட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

#image_title

அதன் பிறகு திரிஷாவுடன் ரோட் மற்றும் சிம்புவின் பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். பிறகு எதிர்பார்த்த அளவிற்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வராத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் திரும்பிய லட்சுமி பிரியா மகாநதி சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் இவரது கேரியரில் மிக முக்கியமாக அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement