LATEST NEWS
அவருக்கு என்ன பாத்தா பயம்…! ஒத்தைக்கு ஒத்த மோதிப் பார்ப்போமா? ரெடியா?…. ரஜினிக்கே சவால் விட்ட பவர் ஸ்டார்…!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பவர் ஸ்டார். எவ்வளவுதான் ட்ரோல் செய்தாலும் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவர் நடிகர் என்பதைத் தாண்டி அரசியல்வாதி, பாடகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

#image_title
2011 ஆம் ஆண்டு லத்திகா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ஃப்ளாப் ஆனது. அதைத் தொடர்ந்து சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் சக்கபோடு போடு ராஜா, அல்டி, வாமனன், போர்க்களம், நானே வருவேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

#image_title
சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பவர் ஸ்டார் என்னிடம் நிறைய திறமை இருக்கின்றது. யாரும் என்னை கூப்பிடுவதில்லை. ஏன் சூப்பர் ஸ்டார் கூட என்னை கூப்பிடுவதில்லை. அவருக்கு என்னை பார்த்தால் பயம். தனியா நின்னு ஜெயிக்கணும். அதுதான் ஒரு டாப் ஹீரோவிற்கு அழகு. நான்கு மொழிகளில் படத்தை வெளியிட்டு ஜெயிக்கிறார்கள். அது எப்படி சரியாக வரும். நானும் ரஜினியும் நேரடியாக களத்தில் மோதி பார்ப்போம், யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போமா என தலைவருக்கே சவால் விட்டிருக்கின்றார் பவர்ஸ்டார்.