“நான் ஐஏஎஸ் அதிகாரி”… ஃபேஸ்புகில் இளைஞரை வளைத்துப் போட்ட பெண்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் ஐஏஎஸ் அதிகாரி”… ஃபேஸ்புகில் இளைஞரை வளைத்துப் போட்ட பெண்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. பகீர் பின்னணி..!!

Published

on

இதுவரை ஆண்கள் மட்டுமே தங்களை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து வந்த நிலையில், தற்போது பெண்களும் இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்தில் களமிறங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி முகநூல் மூலம் இளைஞர் ஒருவருடன் பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து சில காலத்திற்குப் பிறகு, அந்தப் பெண் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்ற உண்மை கணவனுக்குத் தெரியவந்தது. இதுகுறித்து அவர் மனைவியிடம் கேள்வி எழுப்பியபோது, “அதிகம் குடைந்தால் உன் மீது வழக்குத் தொடர்ந்து சிறையில் தள்ளிவிடுவேன்” என்று அந்தப் பெண் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று தன் மனைவிக்கு எதிராகப் புகார் அளித்தார். திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண் 40 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தராவிட்டால் குடும்பத்தினர் அனைவரையும் பொய் வழக்குகளில் சிக்க வைத்து வாழ்வை அழித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in