LATEST NEWS
இது என்னடா புது ட்விஸ்டு..! ஐஸ் கட்டியைக் காணோம்னு தேடினா… அது ‘ஈசனாய்’ மாறி நின்னு ஷாக் கொடுக்குதே..! சுவாரசிய பின்னணி..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நாக்லா புஜா பகுதியில் வசிக்கும் ஒருவரது வீட்டு குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரில் பனித்துளிகள் உறைந்து, பார்ப்பதற்கு அச்சு அசலாக ‘சிவலிங்கம்’ போன்ற வடிவத்தில் பனி வடிவம் ஒன்று உருவாகியுள்ளது. குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோது இந்த விசித்திரமான அமைப்பைக் கண்ட குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர். இந்தத் தகவல் காட்டுத்தீ போல அந்தப் பகுதி முழுவதும் பரவியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் இதனைப் பார்ப்பதற்காக அந்த வீட்டில் குவியத் தொடங்கினர்.
குளிர்சாதனப் பெட்டிக்குள் பனி சிவலிங்கம் உருவாகியிருக்கும் செய்தியைத் தொடர்ந்து, அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் சிவ பக்தர்கள் அந்த பனி லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள், ஆரத்திகள் மற்றும் ஜலாபிஷேகம் செய்து, “ஹர ஹர மஹாதேவ்” என்று முழக்கமிட்டு வழிபடத் தொடங்கினர். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து வீடு தற்போது ஆன்மீக வழிபாட்டுத் தலமாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி இணையவாசிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் இதே காலகட்டத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளதால், இமயமலைப் பனி லிங்கத்துடன் இதனை ஒப்பிட்டுப் பக்தர்கள் பலரும் பரவசமடைந்துள்ளனர். பலர் இதனைப் பரமசிவனின் தெய்வீக அருளாகக் கருதி வழிபட்டு வரும் வேளையில், குளிர்சாதனப் பெட்டியின் உறைபனி நிலை மற்றும் காற்றோட்டக் குறைபாடு காரணமாக இயற்கையாகவே பனி இவ்வாறு உறைந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞான ரீதியாகச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியாயினும், இந்த விசித்திர நிகழ்வு ஆக்ராவில் பெரும் விவாதத்தையும் ஆன்மீக ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
