LATEST NEWS
டேய் என்னங்கடா இது..? இவ்ளோ கேவலமா இருக்கு… இதையா சாப்புடுறீங்க.? முதல் முறையாகப் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட்ட சிங்கத்தில் ரியாக்ஷன்… நெட்டிசன்களை சிரிக்க வைத்த வீடியோ..!!
காட்டின் கொடூரமான ராஜாவான சிங்கத்திற்கு இறைச்சிக்கு பதிலாகப் பச்சைக் காய்கறிகளைக் கொடுத்தால் என்னவாகும்? சமூக வலைத்தளங்களில் தற்போது அதுபோன்ற ஒரு வேடிக்கையான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. எப்போதும் வேட்டையாடி உணவருந்தும் சிங்கத்தின் இந்த விசித்திரமான மற்றும் மாறிய ரூபத்தைப் பார்த்து மக்கள் தங்களது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் ரசித்து வருகின்றனர்.
இந்த வைரல் வீடியோவில், ஒரு சிங்கம் தனது கூண்டில் கம்பீரமாக உலா வருகிறது. அப்போது அதன் பார்வையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பச்சைக் காய்கறி ஒன்று படுகிறது. தன் வாழ்க்கையில் காய்கறியைப் பார்த்திராத அந்த சிங்கம், முதலில் அதை மிகவும் கூர்ந்து கவனித்து, தன் பெரிய பாதங்களால் தொட்டுப் பார்த்து அது என்னவென்று புரிந்துகொள்ள முயல்கிறது. பின்னர், அந்த காய்கறியை வாயில் வைத்தவுடன் சிங்கத்தின் முகம் மாறும் விதம் பார்க்கவே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. “அடடே, எனக்கு என்னத்தைக் கொடுத்துட்டீங்க!” என்பது போல அதன் கண்ணும் உதடுகளும் சுருங்கிப் போகின்றன.
https://www.instagram.com/reel/Db3FBh-ISYy/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் @nvu_india என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் லைக் செய்துள்ளனர். இதன் கமெண்ட் பகுதியில் பயனர்கள் தங்களது நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், “எங்கே வந்து மாட்டிக்கொண்டோம், ஒருமுறை வெளியே வரட்டும் அப்புறம் பார்த்துக்கிறேன் என்று சிங்கம் மனதுக்குள் நினைத்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “ஒரு தீவிர அசைவப் பிரியரிடம் பச்சைக் காய்கறியைக் கொடுத்தால் அவருடைய ரியாக்ஷனும் இப்படித்தான் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
