CINEMA
ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..? கூலி படத்தை விட அதிகமாச்சே..!

நடிகர் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினி 260 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கூலி படத்திற்காக 230 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்பட்ட நிலையில் ஜெயிலர் 2 படத்தில் அவருடைய சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த படத்திலும் கமிட் ஆகாததால் இந்த படம் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும், ரஜினி நடிப்பில் இருந்து விலகி ஓய்வெடுக்க இருப்பதாகவும் செய்திகள் பரவியது. ஆனால் அவருடைய மனைவி லதா ஜெயிலர் 2 படத்துக்கு பிறகும் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார் என்று கூறினார்.