“என் கணவரை வேலையை விட்டு தூக்குங்க!”.. பள்ளி அறையிலேயே அந்தரங்கம்… கணவரை பொறிவைத்து பிடித்த அரசு அதிகாரி மனைவி… நடுக்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் கணவரை வேலையை விட்டு தூக்குங்க!”.. பள்ளி அறையிலேயே அந்தரங்கம்… கணவரை பொறிவைத்து பிடித்த அரசு அதிகாரி மனைவி… நடுக்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் நடத்தை மீது சந்தேகமடைந்த அவரது மனைவி, பள்ளி வளாகத்தில் ரகசியமாகப் பொருத்திய கேமரா மூலமாக இந்த ஆதாரம் சிக்கியுள்ளது. அரசு அதிகாரியான அந்த மனைவி, தன்னிடம் இது போன்ற 250-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், தன் கணவரைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யாமல் நிரந்தரமாகப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதேபோல், சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியரின் கணவரும், தனது மனைவியின் அரசு வேலைக்காகப் பாடுபட்ட தன்னை ஏமாற்றிவிட்டுத் தவறான உறவில் ஈடுபட்ட அந்தப் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அடிப்படைக் கல்வி அதிகாரி சந்தீப், குற்றச்சாட்டுகள் மற்றும் யாருக்கும் தெரியாமல் பள்ளிக்குள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது எப்படி என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்த ஒழுக்கக்கேடான சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் மற்றும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் பள்ளிச் சூழல் சீர்கெட்டுவிடும் என்ற அச்சத்தில், அவர்களின் பெயர்களைப் பள்ளியிலிருந்து நீக்கக் கோரி பள்ளி வளாகத்தில் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in