LATEST NEWS
“ஐயோ கடவுளே… திடீரெனப் பாய்ந்த மிருகம்… கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியில் சிக்கிய வாலிபர்.. அடுத்து நடந்த பேரதிர்ச்சி.. நெஞ்சை பதற வைக்கும் திகில் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் சாலைப் புதர் பகுதியிலிருந்து திடீரெனக் குறுக்கே பாய்ந்த காட்டு மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய அதிர்ச்சியில் இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்ட சில விநாடிகளில், அவருக்குப் பின்னால் வந்த டிரைலர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியதோடு, சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இடுநடுங்க வைக்கும் இச்சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
A young man was killed in a tragic road accident in Ghazipur after his motorcycle reportedly collided with a nilgai that suddenly emerged from roadside bushes.
According to preliminary information, the impact of the collision threw the rider onto the road. Moments later, a… pic.twitter.com/pj6Ym9VmFC— Hate Detector 🔍 (@HateDetectors) August 5, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கினர். விபத்து நடந்த விதம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலைகளில் திடீரெனக் குறுக்கிடும் வனவிலங்குகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கவலையை இச்சோகச் சம்பவம் மீண்டும் அதிகரித்துள்ளது.
