CRIME
“வயிற்றில் ஒரே வாயுத்தொல்லைப்பா.” தந்தையை ஏமாற்றிய 25 வயது இளம்பெண்… 2 நாளில் குப்பைமேட்டில் அழுத பச்சிளம் குழந்தை.. காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்… சிசிடிவியால் சிக்கிய உண்மை…!!
ஹரியானா மாநிலம் பானிபட்டில் கணவரை இழந்த 25 வயது பெண் சோனியா, தனது வயிற்றில் இருப்பது வெறும் “கேஸ்” என்று கூறி குடும்பத்தினரை ஏமாற்றி, ரகசியமாகப் பெற்றெடுத்த குழந்தையைக் குப்பையில் வீசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த சோனியா, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது பக்கத்து வீட்டு இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவர் கர்ப்பமடைந்தார். அவரது வயிறு பெரிதாக இருப்பதை கவனித்த தந்தை கேள்வி எழுப்பியபோது, “வயிற்றில் கேஸ் பிராப்ளம் (எரிவாயுத் தொல்லை)” என்று கூறி உண்மையை மறைத்துள்ளார்.
ஆனால், இந்த பதிலைச் சொன்ன இரண்டே நாட்களில் சோனியாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பயந்த அவர், பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு மூடி, அருகில் இருந்த குப்பை மேட்டில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்துவிட்டார். மறுநாள் காலையில் அப்பகுதியைச் சுத்தம் செய்ய வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர், குப்பையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சோனியா குழந்தையைக் குப்பையில் வீசிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையைக் கொடூரமாகக் குப்பையில் வீசிய தாய் சோனியாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
