LATEST NEWS
3 பொம்பள பிள்ளைங்கள படிக்க வச்சு.. ஆசிரியர் ஆக்கிய தந்தை… இறுதிச்சடங்கை வீடியோ காலில் காட்டிட்டு நீங்களே.. பிள்ளைங்க சொன்ன வார்த்தை… முதியோர் இல்லத்தில் நடந்த கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவ்சரண் ராம்சரண் குப்தா என்ற முதியவர், தமக்கு இருந்த மூன்று மகள்களையும் மகன்களைப் போலவே பாவித்து, மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தந்தையின் உழைப்பால் நன்கு படித்து அந்த மூன்று மகள்களும் ஆசிரியர்களாக மாறினர். ஆனால், தங்களுக்கு அரசு வேலை கிடைத்தவுடன், பெற்ற தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு அவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஆதரவின்றி தவித்து வந்த திரு. குப்தா, நேற்று நள்ளிரவில் காலமானார்.
அவரது மறைவு குறித்து முதியோர் இல்ல ஊழியர்கள் அந்த மூன்று மகள்களுக்கும் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்தனர். ஆனால், அந்த மகள்களோ, “நாங்கள் மிகவும் தூரத்தில் இருக்கிறோம், அதோடு வேலைப்பளு அதிகமாக உள்ளது; எனவே, இறுதிச்சடங்கை எங்களது வாட்ஸ்அப் வீடியோ காலில் காட்டிவிட்டு, நீங்களே தகனம் செய்துவிடுங்கள். அதற்கான செலவிற்கு 5,100 ரூபாயை ஆன்லைனில் அனுப்பிவிடுகிறோம்” என்று மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். கையில் வாங்கிய கேக் மற்றும் பணத்தை விடப் பெற்ற பாசம் பெரிதல்ல என்று அவர்கள் நடந்துகொண்ட விதம் அங்கிருந்தோரை கலங்கடித்தது.
பெற்ற மகள்களின் இந்த இதயமற்ற செயல்தான், இன்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஒரு மகனாவது பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்குக் காரணமாக அமைகிறது எனச் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. மகன் எவ்வளவுதான் பொறுப்பற்றவனாக இருந்தாலும், தந்தையின் இறுதிச் சடங்கிற்கு ஓடோடி வந்து கொள்ளி வைப்பான் என்ற நம்பிக்கையை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது. இன்றைய அவசர உலகில், பணத்திற்கும் சுயநலத்திற்கும் முன்னால் மனித உறவுகளும் பாசமும் முற்றிலும் சிதைந்து வருவதையே இந்தச் சோகமான நிகழ்வு காட்டுகிறது.
