அதிமுகவில் அடுத்த பிளவா..? எடப்பாடி பழனிசாமி தலையில் மீண்டும் இடியை இறக்கிய தள்ளிய சீனியர்கள்.. ஆடிப்போன இரட்டை இலை முகாம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுகவில் அடுத்த பிளவா..? எடப்பாடி பழனிசாமி தலையில் மீண்டும் இடியை இறக்கிய தள்ளிய சீனியர்கள்.. ஆடிப்போன இரட்டை இலை முகாம்..!!

Published

on

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், நடைபெற்ற நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா மற்றும் சமீபத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், எடப்பாடி பழனிசாமி தலைமை மீது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தொடர்ந்து தீவிர அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி நடத்தும் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உட்கட்சி ஆலோசனைக் கூட்டங்களை இவர்கள் இருவரும் தொடர்ந்து புறக்கணித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 அன்று தொடங்கிய நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகச் பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வழக்கம்போல இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திலும் எஸ்.பி.வேலுமணியும் சி.வி.சண்முகமும் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அதன்பின் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகளில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in