CRIME
“என்னை அவகிட்ட கூட்டிட்டு போங்க..!” மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு காவல் நிலையத்தில் கணவன் வைத்த பகீர் கோரிக்கை.. அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்.. திடுக்கிடும் பின்னணியில்..!!!
உத்திரபிரதேசம் ரத்லாமின் சுனாரோன் கி பாவுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஸ்கர் அலி என்பவர், தனது மனைவி ருகையாவை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். இச்சம்பவம் நடக்கும் போது அவர்களின் 7 வயது மகளும், 2 வயது மகனும் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர். தந்தை தாயைத் தாக்குவதைக் கண்ட சிறுமி, உடனே உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் கொடுத்துள்ளாள். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது அஸ்கர் அலி மனைவியைத் தாக்குவதைக் கண்டு, உடனடியாக மாணக் சவுக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் விக்ரம் சிங் சவுகான் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று எதிரியைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஸ்கர் அலி, கொலைக்கான எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல், “என்னை ருகையாவைப் பார்க்க விடுங்கள்” என்று தொடர்ந்து காவல்துறையினரிடம் அழுது புலம்பிக் கொண்டே இருந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், உயிரிழந்த பெண்ணின் சகோதரர் முகமது காச்ரோத்வாலா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ருகையாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அமைதியான முறையில் சென்று கொண்டிருந்த குடும்பத்தில் இந்தத் திடீர் அசம்பாவிதம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்கர் அலி கடந்த சில மாதங்களாகவே மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவருக்கு ஆன்மீகப் பரிகாரங்கள் செய்யப்பட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தக் கூற்றுகளை காவல்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. குடும்பப் பின்னணி மற்றும் மனநலப் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், இந்த கொடூரக் கொலைக்கான உண்மையான பின்னணியைக் கண்டறியத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
