LATEST NEWS
யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..! அதிமுகவில் இருந்து விலகல்..? உண்மையை போட்டுடைத்த எஸ்.பி.வேலுமணி..
அதிமுக தங்களை வளர்த்த கட்சி என்றும், அது தங்களது கட்சி என்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் அமைச்சர்களைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. தாங்கள் அதிமுகவில் இருப்பது சிலருக்குப் பிடிக்கவில்லையா என்ற கேள்வியையும் அவர் இந்த சந்திப்பின் போது எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த சந்திப்பு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டது அல்ல என்றும், அத்திக்கடவு – அவினாசி திட்டம் உள்ளிட்ட தங்களது பகுதி சார்ந்த முக்கிய கோரிக்கைகளுக்காகவே அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசியதாக விளக்கம் அளித்துள்ளார்.
