LATEST NEWS
“இபிஎஸ்-க்கு விழுந்த பேரிடி..!” தவெகவில் SP வேலுமணி, CV சண்முகம்..? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தீவிர அதிருப்தியில் இருந்து வரும் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முக்கிய ஆலோசனையின் போது, தவெகவில் இணைந்து அமைச்சராக உள்ள செங்கோட்டையனும் உடன் இருப்பதாகக் கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வழங்கிய கட்சியின் புதிய பதவிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் திட்டவட்டமாக மறுத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். இத்தகைய பரபரப்பான சூழலில், கட்சியின் முக்கிய அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது, அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசலை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதோடு அரசியல் களத்திலும் பெரும் காரசாரமான விவாதங்களை கிளப்பியுள்ளது.
