நாளைக்கு இருக்கு ஆட்டம்..! தைரியம் இருந்தா வாயைத் திறந்து பதில் சொல்லட்டும்.. முதலமைச்சருக்கு உதயநிதி விடுத்த அதிரடி சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாளைக்கு இருக்கு ஆட்டம்..! தைரியம் இருந்தா வாயைத் திறந்து பதில் சொல்லட்டும்.. முதலமைச்சருக்கு உதயநிதி விடுத்த அதிரடி சவால்..!!

Published

on

தமிழ்நாட்டில் காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து விவாதிக்க நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இக்கட்டான இந்தச் சூழலில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக எப்போதும் துணையாக நிற்கும் என்று உறுதியளித்த அவர், தவெக அரசு காவிரித் தண்ணீரை முறையாகக் கேட்டுப் பெறுவதில் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவையில் பேச நாளை கேள்வி நேரம் முடிந்ததும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளோம். அப்போது எங்களது அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, முடிந்தால், தைரியம் இருந்தால் முதலமைச்சர் நாளை வாயைத் திறந்து பதில் சொல்லட்டும்” எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நேரடியாகச் சவால் விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in