“அமித் ஷா, ஆளுநர் ஊழல் பற்றி தவெக பேசுமா..?” முதல்வர் விஜய்க்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய அதிரடி சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமித் ஷா, ஆளுநர் ஊழல் பற்றி தவெக பேசுமா..?” முதல்வர் விஜய்க்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய அதிரடி சவால்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகம் உண்மையாகவே ஊழலுக்கு எதிராக நின்றால், கடந்த கால ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ய அனுமதி அளிக்காத ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்துப் பேசத் தயாரா என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிரடிக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஊழலுக்கு எதிராக எல்லா காலத்திலும் நெஞ்சை நிமிர்த்தி அரசியல் செய்பவர்கள் தாங்கள்” என்று குறிப்பிட்ட அவர், ஊழல் ஒழிப்பில் தவெகவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், தற்போதைய இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தவெக – திமுக இடையே அரசியல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், சு.வெங்கடேசன் எம்பி-யின் இந்த விமர்சனம் தவெக-வின் அரசியல் நிலைப்பாடு குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் மத்திய பாஜக அரசின் நிலைப்பாடுகள் குறித்து தவெக தனது அரசியல் கொள்கையை எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறது என்பதை உற்றுநோக்கும் வகையில் இடதுசாரிகளின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in