CRIME
ஐயோ கடவுளே.. கணவன் ICU-வில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில்… வீட்டில் மனைவியின் அதிரடி முடிவு.. காதல் திருமணம் செய்த சில மாதங்களிலேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறால் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியைச் சேர்ந்த சாகர் சாகுவும், லக்னோவைச் சேர்ந்த ராதாவும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2025 நவம்பர் மாதம் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே திடீரென மனக்கசப்பும் மோதலும் ஏற்பட்டுள்ளது. இதில் தீவிர மன உளைச்சலடைந்த சாகர் நச்சுக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
प्यार का अंत!
UP- झांसी के सागर साहू लखनऊ की राधा से प्यार करते थे. नवम्बर-2025 में परिवारों की रजामंदी के बाद दोनों की शादी हो गयी. एक दिन पहले सागर और राधा के बीच तल्खी हुई और सागर ने जहर पी लिया. परिवार सागर को अस्पताल ले जाने के लिए निकला तो घर से खबर आयी कि राधा ने फांसी… pic.twitter.com/KPil3TWFdu— Narendra Pratap (@hindipatrakar) August 5, 2026
உயிருக்குப் போராடிய சாகரை அவரது குடும்பத்தினர் மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த வேளையில், வீட்டில் இருந்த மனைவி ராதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வந்து அதிர்ச்சியளித்தது. தற்போது சாகர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறிய கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காணாமல் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவால், ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கை சோகத்தில் முடிவடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
