CRIME
“அடச்சீ..! நீயெல்லாம் ஒரு மனுஷியா..?!” கணவன் உயிருக்குப் போராட… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரின் மஜித்ஜ்பூர் பகுதியைச் சேர்ந்த அனுப் குமார் என்பவரின் கொடூர முடிவும், அதைத் தொடர்ந்து நடந்த அதிர்ச்சி சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வந்த அனுப்பிற்கு, மனு தேவி என்ற மனைவியும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், மனு தேவிக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த திலீப் என்பவருக்கும் இடையே கடந்த ஓராண்டாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அனுப் பலமுறை மனைவியைக் கண்டித்தும், மனு தேவி தனது நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லை.
கடந்த ஜூலை 31 அன்று, தன் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் ஒன்றாக இருந்ததை அனுப் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்களிடம் எதுவும் பேசாமல் அமைதியாகச் சந்தைக்குச் சென்ற அவர், விஷமருந்திவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். உயிருக்குப் போராடியபடிதான் விஷம் குடித்துவிட்டதாக அனுப் மனைவியிடம் கூறியபோதும், அவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக, கள்ளக்காதலன் திலீப்பை வீட்டிற்கு வரவழைத்து, கணவன் வலியால் துடிப்பதைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வீடியோ படம்பிடித்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
