CRIME
“பகீர்..! 27 முறை கத்தியால் குத்தப்பட்டு ஆசிரியை கொடூரக் கொலை..! விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!”
அரியானா மாநிலம் ஃபரிதாபாத் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் சந்தியா. நேற்று காலை 9:30 மணியளவில் இவர் பள்ளிக்கு வந்தபோது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த நபர் ஒருவர் ஆசிரியையைப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பள்ளி ஊழியர்கள் தகவலளித்ததை அடுத்து ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவரை இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இக்கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஃபரிதாபாத் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இக்கொலையில் ஈடுபட்ட அமித் என்பவரைச் சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அமித் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட முயன்றதாக ஆசிரியை சந்தியா முன்னதாகப் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பதும், அதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே திட்டமிட்டுப் பள்ளிக்குள் புகுந்து இக்கொடூரக் கொலையைச் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அமித் தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
