“ஐயோ கடவுளே… காதல் இவ்வளவு கொடூரமானதா..?!” காதலி புதைக்கப்பட்ட இடத்தில் காதலன் செய்த காரியம்… நெஞ்சைப் பிழியும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கடவுளே… காதல் இவ்வளவு கொடூரமானதா..?!” காதலி புதைக்கப்பட்ட இடத்தில் காதலன் செய்த காரியம்… நெஞ்சைப் பிழியும் சோகம்..!!

Published

on

2023 அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த தனது காதலியின் நினைவைத் தாங்க முடியாமல், இஸ்ரேல் இளைஞர் ஒருவர் காதலியின் கல்லறையிலேயே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. உயிரிழந்த லிரோன் பர்தா என்ற பெண், நோவா இசைவிழாவில் பார் மேனேஜராகப் பணியாற்றியபோது ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார். அத்தாக்குதலின் போது தப்பிச் செல்ல வாய்ப்பிருந்தும், காயமடைந்த மக்களுக்கு உதவ முயன்றதால் அவர் உயிரழந்தார். அவரது உடல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள எல்கானா மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

லிரோனின் காதலரான 30 வயதான பார் அஸ்ராப், தனது காதலியின் மறைவுக்குப் பிறகு கடும் மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 1 அன்று நடந்த தனது சகோதரரின் திருமண நிகழ்வின் போது திடீரென அஸ்ராப் காணாமல் போனார். அவரைத் தேடிச் சென்ற அவரது சகோதரி, எல்கானா மயானத்தில் லிரோனின் கல்லறைக்கு அருகே அஸ்ராப் துப்பாக்கிக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்தபோதிலும் அஸ்ராபின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

Advertisement

தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு கூட, லிரோனின் நினைவுகள் தன்னை தீவிரமாக வாட்டுவதாகவும், அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றும் அஸ்ராப் தனது தாயாரிடம் உருக்கமாகக் கூறியுள்ளார். ஹமாஸ் தாக்குதல் நடந்து சில ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், அதிலிருந்து தப்பியவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் சந்தித்து வரும் தீவிர மன உளைச்சலுக்குச் சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளது. முன்னதாக, நோவா இசைவிழா தாக்குதலில் காதலியை இழந்து தப்பிய ரோய் ஷாலேவ் மற்றும் மகனை இழந்த யெலேனா கிலர் ஆகியோரும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in