ஒரு நொடி கோபத்தால் என்ன ஆச்சு பாத்தீங்களா..? வீட்டுத் தகராறில் எல்லை மீறிய கோபம்.. மருமகளை கீழே தள்ளி விட்ட மாமனார்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

ஒரு நொடி கோபத்தால் என்ன ஆச்சு பாத்தீங்களா..? வீட்டுத் தகராறில் எல்லை மீறிய கோபம்.. மருமகளை கீழே தள்ளி விட்ட மாமனார்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், விரார் மேற்காக உள்ள பாலிஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட நாரங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பிராச்சி கல்பேஷ் பாட்டீல். கடந்த ஜூலை 30-ஆம் தேதி, பிராச்சியின் சகோதரர் விஷால் பாட்டீல், தனது சகோதரியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பிராச்சியின் 8 மாத குழந்தை, அவரது மாமனார் கணபத் சகாராம் பாட்டீலின் (60) தோளில் இருந்துள்ளது. தாய் பிராச்சி குழந்தையைத் தூக்க முயன்றபோது, குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த மாமனார் கணபத், மருமகள் பிராச்சியை பலமாகத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி தரையில் விழுந்த பிராச்சிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் 8 மாத குழந்தை தாயின் அரவணைப்பை இழந்து தவிக்கும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இச்சம்பவம் குறித்து பிராச்சியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், பாலிஞ்ச் காவல்துறையினர் மாமனார் கணபத் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 105 மற்றும் பிரிவு 351ன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை விசாரிக்கின்றனர். மூத்த காவல் ஆய்வாளர் பிரகாஷ் காவ்லே தலைமையில் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in