LATEST NEWS
“இவனுக்கெல்லாம் பயமே இல்லையா..?!” கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து ஓட்டுநர் செய்த கூத்து… இணையத்தைக் கொதிக்க வைக்கும் மாணவிகளின் கண்ணீர் வீடியோ!
பிகார் மாநிலம் சாப்ராவில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரங்கேறியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவிகள் விடியோவில் தெளிவாக கூறியுள்ளனர். விடுதி பாதுகாப்பு குறித்து கல்லூரி முதல்வர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்க, அவரது ஓட்டுநரோ விடுதிக்குள் புகுந்து மாணவிகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிமுறைகளை அப்பட்டமாக மீறி மகளிர் விடுதிக்குள் நுழைந்த அந்த ஓட்டுநர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இதுகுறித்து வெளியிலோ அல்லது நிர்வாகத்திடமோ புகார் அளித்தால் பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடியோவில் கதறியுள்ளனர்.
प्रिंसिपल साहब Hostel Security पढ़ाते रहे और उनका Driver छात्राओं की सुरक्षा में सरेआम Practical में फेल होता रहा। 💔💔
बिहार के छपरा Engineering College में एक गंभीर मामला सामने आया है।
छात्राओं ने हॉस्टल सुरक्षा को लेकर बेहद गंभीर आरोप लगाए हैं।
छात्राओं का दावा है कि… pic.twitter.com/NyG0LnHsGr— Sunil Kumar (@sunilku20403616) August 4, 2026
கல்லூரி விடுதியிலேயே மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது, பெற்றோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நமது பெண் குழந்தைகள் பொறியியல் கல்லூரிகளில் கூட பாதுகாப்பாக இல்லையா? சாதாரண ஒரு ஓட்டுநர் நமது மகள்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதை வேடிக்கை பார்க்கப் போகிறோமா?” எனப் பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்து வருகின்றன. இத்தகைய நபர்களுக்குக் கடுமையான சட்டப்பூர்வ தண்டனை வழங்கி, விடுதி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. தற்சமயம் இச்சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் அலட்சியமாக இருந்த நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
