உனக்கு பாலியல் வன்கொடுமை நடந்து ரொம்ப நாள் ஆச்சு… மெடிக்கல்ல நிரூபிக்க முடியாது.. அதனால் என்னோட நீ… நீதி கேட்க வந்த மாணவியிடம் அக்கிரமம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்..!! – cinefeeds
Connect with us

CRIME

உனக்கு பாலியல் வன்கொடுமை நடந்து ரொம்ப நாள் ஆச்சு… மெடிக்கல்ல நிரூபிக்க முடியாது.. அதனால் என்னோட நீ… நீதி கேட்க வந்த மாணவியிடம் அக்கிரமம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவரிடமே தவறாக நடக்க முயன்ற உதவி ஆய்வாளர் தர்மவீர் ஷாஹி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பி.எட் படித்து வரும் மாணவி ஒருவர், பஸ்தி பகுதியைச் சேர்ந்த தனது காதலன் தர்மவீர் சிங் என்பவர் திருமண ஆசை காட்டித் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறி லக்னோ காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மவீர் ஷாஹி, நீதி கேட்க வந்த அந்தப் பெண்ணிற்கு உதவாமல் அதிர்ச்சிகரமான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். “உனக்கு பாலியல் வன்கொடுமை நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், மருத்துவப் பரிசோதனையில் அது நிரூபணமாகாது. எனவே, உனக்கு பாலியல் வன்கொடுமை நடந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. எனவே நீ என்னோடது உழலுறவு கொண்டால் உன் வழக்கு நீதிமன்றத்தில் வலுவாக நிரூபணமாக உதவலாம்” என்று கூறி அந்தப் பெண்ணிற்கு அவர் பாலியல் ஆசை காட்டியுள்ளார்.

Advertisement

காவல் அதிகாரியின் இந்த அருவருப்பான பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அவர் பேசிய தொலைபேசி உரையாடலைச் சாதுரியமாகப் பதிவு செய்துகொண்டார். பின்னர் அந்த ஆதாரத்துடன் உயரதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் தீவிர விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in