LATEST NEWS
BREAKING:”கட், காப்பி, பேஸ்ட் பண்ணி போலி வீடியோ பரப்புறாங்க..!” போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே ஆவேசமடைந்த உதயநிதி..!!
நான் பேசாத விஷயத்தைப் பேசியதாக ‘கட், காப்பி, பேஸ்ட்’ செய்து போலியான வீடியோவை பரப்பியுள்ளனர் என்று கைதாகிச் செல்லும்போது உதயநிதி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தவறுகளையும் தோல்விகளையும் திசை திருப்புவதற்காகவே தன் மீது இந்த ஆளுங்கட்சியின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசின் உண்மை முகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதால், தன்னை மிரட்டிப் பணியவைக்கப் பார்க்கிறார்கள் என்று கூறிய அவர், எந்தவொரு மிரட்டலுக்கும் பயந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைத் தான் ஒரு பொருட்டாக மதிக்காமல் ‘காமெடியாகவே’ பார்ப்பதாகவும் உறுதியுடன் தெரிவித்தார்.
