CRIME
“அடச்சீ! நீயெல்லாம் ஒரு அம்மாவா..?!” 1.5 லட்சத்திற்குச் சொந்த மகளையே விற்ற தாய்… கடத்தல் புகார் கொடுத்து ஆடிய நாடகம் அம்பலம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த காவல்துறையினர், பணத்துக்காகச் சொந்த மகளையே தாய் ரூ.1.5 லட்சத்திற்கு விற்ற திடுக்கிடும் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். டேராடூனைச் சேர்ந்த 35 வயது பெண், பிங்கி மாலிக் என்பவர் மூலமாகத் தனது மகளை லவி குமார் என்பவருக்கு ரூ.1.5 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர் லவி குமார் அச்சிறுமியைத் திருமணம் செய்து வைப்பதற்காக மணீஷ் என்பவரிடம் ரூ.2 லட்சத்திற்கு விற்றுள்ளார். ஆனால், பேசிய தொகையில் ரூ.80,000 மட்டுமே கிடைத்ததால், மகளை மீட்டெடுக்க அந்தத் தாய் காவல்துறையில் பொய்யான கடத்தல் புகார் அளித்தது விசாரணையில் அம்பலமானது.
இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்ட காவல்துறையினர், சிறுமியின் தாய் உட்பட இவ்வழக்கில் தொடர்புடைய மனிஷ், லவி குமார் மற்றும் பிங்கி மாலிக் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். இக்குற்றவாளிகள் இதற்கு முன்பும் இதுபோன்று சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்யும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும், வழக்கின் பிற கோணங்கள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
