CRIME
இவளெல்லாம் ஒரு பொம்பளையா..? தூங்கிக் கொண்டிருந்த 9 மாதக் குழந்தையின் வாயில் பெவி குயிக் ஊற்றி… அத்தை செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த 9 மாதக் குழந்தையின் வாயில் பெவி குயிக் போன்ற ஒட்டும் திரவத்தை ஊற்றிய அத்தையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் லோஹேகான், கல்வாட் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அல்தாஃப் நபி ஷேக் என்பவரின் 9 மாத ஆண் குழந்தையின் உதடுகள் திடீரென ஒட்டிக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
குழந்தையின் வாயில் பசை ஊற்றப்பட்டதால் உதடுகள் மற்றும் வாய் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின் குழந்தை தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, உடல்நலம் தேறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் தந்தை அல்தாஃப் ஷேக் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது சகோதரி சானியா ஷேக் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, அல்தாஃபின் மனைவி ஜைனப்பிற்கும், அவரது நாத்தனார் சானியா ஷேக்கிற்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்ப விவகாரங்கள் தொடர்பாகத் தொடர் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. இந்த முன்விரோதத்தின் காரணமாகவே, வீட்டில் தொட்டிலில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில் சானியா ஷேக் பழிவாங்கும் நோக்கில் பசையை ஊற்றியது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள சானியா ஷேக் உள்ளிட்ட 3 குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
