TRENDING
என்னதான் எதிரியாக இருந்தாலும்… கமலுக்காக இந்தியன் 2 படத்தில்… ரஜினி செய்த செயல்…!
தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2. இப்படமானது 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இந்த இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசன் உடன் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பை கமலஹாசன் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வெளியிட்டார்.
மேலும் தனது பிறந்த நாளான நவம்பர் 7 2018 அன்று இப்படத்தினை லைகா productions தயாரிக்கபோவதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டார். மேலும் இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லட்சுமி சரவணகுமார் ஆகியோர் வசனங்களை எழுதி உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதே நேரத்தில் படத்தின் intro -வினை நாளை லைக்கா productions வெளியிட உள்ளனர்.
மேலும் இந்த intro -வினை ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். இதனை குறித்த அதிகாரபூர்வ தகவலை லைக்கா productions இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனுடன் #superstarforulaganayagan என்ற ஹாஷ்டாக் உடன் பதிவேற்றம் செய்திருந்தனர். மேலும் கமல் நடித்த படத்தின் intro வை ரஜினிகாந்த் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள்மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறனர்.
View this post on Instagram