இழு, இழுன்னு இழுத்து… ஒரு வழியா first update கொடுத்த… இந்தியன் 2 படக்குழுவினர்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இழு, இழுன்னு இழுத்து… ஒரு வழியா first update கொடுத்த… இந்தியன் 2 படக்குழுவினர்…!

Published

on

இந்தியன் 2 என்பது திரைக்கு வரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன்  திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் கமலஹாசன் இப்படத்தில் ராணுவ தளபதியாக  நடிக்கிறார்.

2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் பிரீமியரின் போது இப்படத்தின் தயாரிப்பு பற்றிய தகவலை வெளியிட்டார்  கமல்ஹாசன். மேலும் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7, 2018 அன்று படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  படத்திற்கான வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லெட்சுமி சரவணகுமார் எழுதியுள்ளனர்.

Advertisement

இதின் படப்பிடிப்பு 2018 டிசம்பரில் தொடங்கும் என்றும், படம் 2019 இல் வெளியாகும் என்றும் இயக்குனர் ஷங்கர் கூறினார். கமல்ஹாசன் தனது 58 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் இது என்று டிசம்பர் 2018 இல் அறிவித்தார். படப்பிடிப்பு டிசம்பர் 14 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு 18 ஜனவரி 2019 அன்று தான் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 11 பிப்ரவரி 2019 அன்று தொடங்கியது.

மேலும் இதற்கு அனிருத் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்கிறார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. இப்படமானது அதோ வருது இதோ என்று அவ்வப்பொழுது வதந்தி வெளிவந்தது. ஆனால் படத்தின் update எதையும் படக்குழுவினர் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் தற்பொழுது இதின் புதிய update- யை படக்குழுவினர் வெளியீட்டு உள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in