விஜய் 69வது படம்… என்ன இவர்தான் அப்படத்தின் இயக்குநரா…? வெளியான புதிய அப்டேட்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் 69வது படம்… என்ன இவர்தான் அப்படத்தின் இயக்குநரா…? வெளியான புதிய அப்டேட்…!

Published

on

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படமானது ரூபாய் ரூ .250 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் ஆகும். இப்படம் வெளியான முதல் நாளிலேயே 140 கோடி வசூல் செய்தது. மேலும் படமானது முதல் வாரத்தை கடந்து இரண்டாம் வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து லியோ, சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா என பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜையானது சமீபத்தில் தான் விமர்சையாக நடைபெற்றது. இதன் புகைப்படத்தினை பட குழு விஜயதசமி ஸ்பெஷலாக வெளியிட்டனர்.

Advertisement

இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த் லைலா மைக் மோகன் யோகி பாபு மற்றும் பல நடிக்க உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது விஜய்யின் அடுத்த படத்தை  இயக்குனர்  ஷங்கரின் இயக்குவார்  என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில்  உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in