ராஷ்மிகாவை XEROX எடுத்தது போல் … இருக்கும் பெயர் தெரியா பெண்… வேகமாக பரவும் போட்டோஸ்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ராஷ்மிகாவை XEROX எடுத்தது போல் … இருக்கும் பெயர் தெரியா பெண்… வேகமாக பரவும் போட்டோஸ்…!

Published

on

கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, மிகக்குறுகிய காலத்திலே தனது நடிப்பாலும், அழகாலும் பல இளம் ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ளார். தனது முதல் பட நாயகனான ரக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்த ராஷ்மிகா, அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கன்னட திரையுலகினரை பொறாமைப்பட வைக்கும் வகையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்தது.

ஆனால் தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தேவரகொண்டா உடனான நெருக்கம் காரணமாக திருமணத்தை நிறுத்திவிட்டு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா. மேலும் தமிழிலும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த சுல்தான் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்தார்.

Advertisement

தென்னிந்திய படங்களைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில்  நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஓய்வில்லாமல் படு பிசியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவை ‘நேஷனல் க்ரஷ்’ என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவரைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அப்பெண்ணின் பெயர் மற்றும் பிற விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், இவரும்… திரையுலகில் நடிகையாக அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இதே வேளையில் இது உண்மைதானா ? இல்லையானால் மார்பிங் செய்யப்ட்டுள்ளதா? என்ற கேள்விகளை நெட்டிசன்கள்  எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement