CINEMA
அட இதுல யார் கியூட்னு சொல்லுங்களேன்….. கமல் போட்ட இன்ஸ்டா பதிவு…. இணையத்தில் செம வைரல்…!!
நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது .இந்த படம் கடந்த 1996 ஆம் வருடம் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமலஹாசன் சங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கமலஹாசன் “தக் லைப்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சிம்பு கமலுக்கு மகனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து. அதற்கான டப்பிங் பணிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிலையில் கமலஹாசன் இன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கமலஹாசன் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்துள்ளார் . அவர் அருகில் ஒரு சிறுவனும் அவரைப் போலவே தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்துள்ளார். இந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram