24 ஆண்டுகள் கழித்து நடந்த அந்த விஷயம்…. விக்ரமை புகழ்ந்து தள்ளிய காந்தாரா நாயகன்…!! - cinefeeds
Connect with us

CINEMA

24 ஆண்டுகள் கழித்து நடந்த அந்த விஷயம்…. விக்ரமை புகழ்ந்து தள்ளிய காந்தாரா நாயகன்…!!

Published

on

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது .இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று முன்தினம் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் தற்போது விக்ரமை சந்தித்துள்ள கன்னடப் சினிமாவின் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ஆன இயக்குனர் காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதுகுறித்து  மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.

அதாவது அவருடைய பதிவில், நடிகனாக உருவாவதற்கு என்னுடைய பயணத்தில் விக்ரம் சார் எனக்கு எப்போதும் பெரிய இன்ஸ்பிரேஷன். 24 ஆண்டுகள் கழித்து என்னுடைய ஹீரோவை நேரில் சந்தித்தது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியான மனிதராக என்னை உணர வைக்கிறது. என்னை போன்ற நடிகர்களுக்கு உந்து சக்தியாக இருப்பதற்கு மிகவும் நன்றி. தங்கலான்  படத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement