CINEMA
“லேடி சூப்பர் ஸ்டார்” பட்டத்தால் அவமானம்…. அந்த பட்டமே வேண்டாம்…. தடாலடியாக பேசிய நடிகை…!!
நயன்தாராவை தமிழ் சினிமா வட்டாரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அவருடைய ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அந்த டைட்டிலே அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த டைட்டில் ஒரு பெரிய அவமானம் என்று பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். அது வேறு யாரும் அல்ல நடிகை மன்சு வாரியார் தான். தமிழில் அசுரன், துணிவு போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இதனையடுத்து வெற்றிமாறனின் விடுதலை-2, ரஜினியின் வேட்டை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். மஞ்சுவாரியரை மலையாள மீடியாக்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்நிலையில் அதைப்பற்றி பேசிய அவர், என்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது தேவையில்லாத விவாதத்தை ஏற்படுகிறது. அது எனக்கு அவமானத்தை தான் கொண்டு வருகிறது. அந்த பட்டம் எனக்கு வேண்டாம். என்னுடைய ரசிகர்களின் அன்பு மட்டுமே போதும் என்று குறிப்பிட்டுள்ளார்.